
EN-W vs IN-W T20I: இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக டாமி பியூமண்ட் செயல்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து மகளிர் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.