
ஆஸ்திரேலிய அணியானது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளும் இதற்கு முன் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடர்களுக்கான இரு அணி வீரர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, முதல் போட்டிககக தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியானது தொடர் தொடங்கு வதற்கு முன்னரே சில பின்னடைவையும் சந்தித்தது.
அதன்படி அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக எல்லிஸ் செயல்படவுள்ளார். ஏனெனில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பணிச்சுமை மற்றும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.