IND vs AUS, 2nd Test: இந்தியாவுக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லையன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது.
அதன்படி 2ஆவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளைடிவரும் இந்திய அணி, 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதற்கு முக்கிய காரணாம் அக்ஸர் படேலும் அஷ்வினும் இணைந்து அபாரமாக விளையாடியது தான். அதேசமயம் ஆஸ்திரேலிய தரப்பில் அபாரமாக பந்துவீசிய நாதன் லையன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
முதல் டெஸ்ட்டில் சோபிக்காத நாதன் லயன், 2ஆவது டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசினார். 2வது டெஸ்ட்டில் அவர் 5ஆவது விக்கெட்டாக கேஎஸ் பரத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட்டின் மூலம், இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை கைப்பற்றிய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டினார். அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 139 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் 105 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்திலும் உள்ள நிலையில், நதன் லையன் 3ஆம் இடத்தில் உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now