
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி இடையேயான மோதலானது மிகப்பெரும் பேசுபொருளானது. ஏனெனில் விராட் கோலியுடனான மோதல், கேஎல் ராகுலின் பேச்சை கண்டுகொள்ளாதது, ரசிகர்களை பார்த்து "சைலன்ஸ்" சிக்னல், மாம்பழங்களுடனான கொண்டாட்டம், கேஎல் ராகுல் ஸ்டைலில் கொண்டாட்டம் என்று ரசிகர்கள் மறக்கவே முடியாத வகையில் அதிருப்தியை ஏற்படுத்தினார்.
அதிலும் மிகமுக்கியமாக நவீன் மற்றும் விராட் இருவரும் கைகுலுக்கும்போது வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது, அதன்பிறகு, லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய நவீனை அழைத்த போது கோலியுடன் பேச மறுத்து அங்கிருந்து சென்றது என பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் விராட் கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஆர்சிபி - லக்னோ போட்டியின் போது நிகழ்ந்த மோதல் குறித்து போட்டிக்கு பின்னரோ அல்லது அடுத்த சில நாட்களிலோ விராட் கோலி விளக்கம் கொடுத்திருக்கலாம். என் மீது எந்தத் தவறும் இல்லை. போட்டிக்கு பின் கைகுலுக்கி கொண்ட போது, விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார்.