விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் உல் ஹக் சண்டைகள் எல்லாம் களத்திற்குள் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களின் 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 272/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாஹிதி 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 131 ரன்கள் குவித்து நிறைய உலக சாதனைகளை படைத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
Trending
அவருடன் இஷான் கிஷன் 47, விராட் கோலி 55, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்திய அணி வெற்றிபெற்றது. ஆஃப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்தியாவின் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்ததும், அதற்கிடையே கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியது.
அப்போதிலிருந்தே நவீன் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்திய ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் அவருக்கு எதிராக கூச்சலிட்ட ரசிகர்களை கையசைத்து வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டார். அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று விராட் கோலியிடம் கை கொடுத்தார்.
அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட விராட் கோலியும் அவருடைய தோளில் தட்டிக் கொடுத்த தருணத்தை கௌதம் கம்பீர் ஹிந்தியில் மன்னிப்பு மொத்த பகையையும் நட்பாக மாற்றும் வகையில் அமைந்தது. இந்நிலையில் விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் சண்டைகள் எல்லாம் களத்திற்குள் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி நல்ல வீரர். நாங்கள் கை கொடுத்துக் கொண்டோம். இது வரை களத்தில் நடந்தது அனைத்தும் களத்திற்குள் மட்டுமே இருக்கும். வெளிய எதுவுமில்லை. களத்தில் நடந்ததை அனைவரும் பெரிதாக்கி விட்டனர். தற்போது கை கொடுத்த நாங்கள் அனைத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். விராட் கோலி நல்ல குணம் கொண்டவர். டெல்லி அவருடைய சொந்த ஊர் என்பதால் ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சலிட்டார்கள்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now