
Netherlands vs Nepal Three Super Over: கிளாஸ்கோவில் நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேச போட்டியானது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்களை சந்தித்த போட்டியாக சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் நெதர்லாந்து, நேபாள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிளாஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 30 ரன்களையும், தேஜா நிடமானுரு 35 ரன்களையும், சாகிப் ஸுல்ஃபிகூர் 25 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியில் ரோஹித் படேல் 48 ரன்களையும், குஷால் புர்டல் 34 ரன்களையும் சேர்க்க, அந்த அணியும் 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டையில் முடிந்தது.