
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி டேவிட் மில்லரின் அதிரடியான சதம் காரணமாக 49.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. தொடக்கத்தில் அதிரடியாக விளைடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்களையும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றிக்கு உதவியதால் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இப்போட்டிக்கு பின் பேசிய டிராவிஸ் ஹெட், “பரபரப்பாக முடிந்த இந்த போட்டி அபாரமாக இருந்தது. நாங்கள் நாற்காலியை விட்டு நகராமல் இருந்தோம். கடந்த 4 நாட்களாக இன்று நாங்கள் இருந்ததால் எப்படி பிட்ச் இருக்கும் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இருப்பினும் இவ்வளவு பெரிய சூழல் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம்.