டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இது மகேந்திர சிங் தோனியின் 400ஆவது டி20 போட்டியாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
Also Read
இதற்கு முன் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன்பின் அவர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் உள்பட மொத்தமாக 400 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார். இதில் அவர் 24 அரைசதங்களுடன் 7566 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரைப் பெறுவத்தவரையில் எம் எஸ் தோனி இதுவரை 273 போட்டிகளில் விளையாடி 24 அரைசதங்களுடன் 5377 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற அவர், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 5 முறையும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:
- ரோஹித் சர்மா - 456 போட்டிகள்
- தினேஷ் கார்த்திக் - 412 போட்டிகள்
- விரட் கோலி - 408 போட்டிகள்
- எம் எஸ் தோனி - 400 போட்டிகள்
- ரவீந்திர ஜடேஜா - 341 போட்டிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ்(கேட்ச்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி
இம்பாக்ட் வீரர்கள்: டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, தீபக் ஹூடா, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி(கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
Also Read: LIVE Cricket Score
இம்பாக்ட் வீரர்கள்: அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன்
Win Big, Make Your Cricket Tales Now