
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.
இந்நிலையில், நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.