
Zimbabwe T20I Tri Series: ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடம் மில்னே, பெவன் ஜேக்கப்ஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் ஜிம்பாப்வே அணி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.