
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணியையும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவிக்க தொடங்கியுள்ளன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டிரெண்ட் போல்ட், டிம் சௌதீ, லோக்கி ஃபர்குசன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
25 years on. A new chapter #T20WorldCup pic.twitter.com/Z7xhPBOTcq
— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024
அத்துடன் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான பிரத்தேயக ஜெர்சியையும் நியூசிலாந்து அணி இன்றையம் தினம் வெளியிட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டதை தாண்டி, அந்த அணி நிர்வாகம் செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் எந்தவொரு ஐசிசி தொடருக்கு முன்னர் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் செய்தியாளர்களைச் சந்தித்து அணிகளை அறிவிப்பது வழக்கம்.