
கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 28அவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ரயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் 42 ரன்களையும், கேசி கார்டி 32 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 31 ரனக்ளையும் சேர்த்தனர். பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அலிக் அதானாஸ் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், டேவிட் மில்லர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்ததுட 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது.