Advertisement
Advertisement
Advertisement

சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!

கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement
Nicholas Pooran's hundred gave Trinbago Knight Riders a big win over table-toppers Guyana Amazon War
Nicholas Pooran's hundred gave Trinbago Knight Riders a big win over table-toppers Guyana Amazon War (சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 30, 2024 • 09:13 AM

வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 30, 2024 • 09:13 AM

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அனிக்கு ஜேசன் ராய் - பேரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேரிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேசன் ராயுடன் இனைந்த நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். மேலும் நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்கள் என 34 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Trending

அவரைத் தொட்ர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மறுபக்கம் தொடந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 101 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. கயானா தரப்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கெவ்லோன் ஆண்டர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்டர்சன் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் குர்பாஸுடன் இணைந்த ஷாய் ஹோப்பும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியி இறங்கினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஷாய் ஹோப் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷிம்ரான் ஹெட்மையர் 9 ரன்களுக்கும், கீமோ பால் ஒரு ரன்னிலும், மொயீன் அலி 5 ரன்னிலும், ரொமாரியோ ஷெஃப்பர்ட், டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குடகேஷ் மோட்டி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் தாஹிர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குடகேஷ் மோட்டி 26 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் கயானா அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் நாதன் எட்வர்ட்ஸ், டெர்ரன்ஸ் ஹிண்ட்ஸ், வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 74 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement