தொடரிலிருந்து விலகிய நிதிஷ்; அன்ஷுல் கம்போஜிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.

ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் நிதிஷ் ரெட்டி காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வெளியான தகவலின் படி நிதிஷ் ரெட்டி உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் காயத்தை சந்தித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நிதிஷ் ரெட்டியின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் இத்தொடரில் இருந்து விலகி மேல் சிகிச்சைக்காக நாடு திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கொண்டு பயிற்சியின் போது காயத்தை சந்தித்துள்ள அர்ஷ்தீப் சிங்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்து அணி மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அன்ஷுல் கம்போஜ் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு குல்தீப் யாதவ் அல்லது பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் விளையாடும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போட்டிக்கான் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்
Win Big, Make Your Cricket Tales Now