
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது கடுமையான நிலைப்பாட்டைக் காட்டியுள்ளது மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடும்பப் பயணம், வீரர்களின் உடமை வரம்பு மற்றும் தனிப்பட்ட விளம்பரப் படப்பிடிப்புகள் தொடர்பான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் தொடர் முடிந்த பிறகு பிசிசிஐ நடத்திய மறுஆய்வுக் கூட்டத்தின் போது, டிரஸ்ஸிங் ரூமுக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் இல்லாதது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கிட்டத்தட்ட இரண்டு மாத கால ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, முழு அணியும் ஒரே ஒரு அணி விருந்துக்கு மட்டுமே கூடியது என்பதும் தெரியவந்தது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகும் இந்திய வீரர்கள் ஒன்றாக சுற்றித் திரியவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. இதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை வெளியிட வேண்டியிருந்தது. இந்தக் கொள்கையின் கீழ் வீரர்கள் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.