Advertisement

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் தான் முதல் 6 இடங்களில் இருப்பர் - கௌதம் கம்பீர்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

Advertisement
No Place For KL Rahul In Gautam Gambhir's Playing XI FOr Sri Lanka ODIs
No Place For KL Rahul In Gautam Gambhir's Playing XI FOr Sri Lanka ODIs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 31, 2022 • 08:21 PM

வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் இலங்கை அணியை எதிர்த்து உள்நாட்டில் விளையாடுகிறது. இதில் முதலில் நடக்கும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் அடுத்து நடக்கும் ஒருநாள் தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 31, 2022 • 08:21 PM

இந்த இரு தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருந்தது. குறிப்பாக டி20 அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் டி20 அணியிலும் இசான் கிசான் இரு அணிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்!

Trending

இந்நிலையில், இந்த இரு தொடர்களில் ஒருநாள் தொடருக்கு யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஆவர், “தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இசான் கிசான் இறங்குவார்கள். இதற்கு கீழே சென்று பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் அங்கு மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் சூர்யகுமார், ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் வருவார்கள். ஸ்ரேயாஸ் ஒன்றரை வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினார்தான். ஆனாலும் அதை அவர் சிறப்பாக எதிர்கொள்ள தயாராகிவிட்டார். 

இங்கு எல்லாவற்றிலும் பலமான வீரர் என்று யாரும் கிடையாது. அவர் தற்பொழுது தனது பலவீனத்தை எப்படி நிர்வகிக்கிறார் என்பதுதான் முக்கியம். எனவே அவர் ஐந்தாம் இடத்தில் இருக்க வேண்டும். ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா வந்து விடுவார் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement