
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார்.
அதேசயம் இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோ ரூட்டிற்கு மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.