
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தொடர் வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை அடித்து அசத்தியது. பின்னர் 411 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 250 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.