டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜடேஜா சிறந்த தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.
மேலும் தற்போது வரை வெளியான தகவலின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஜடேஜா அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். ஒரு இளம் வீரருக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்க முடிந்தால், ஜடேஜாவும் இரண்டு ஆண்டுகள் அணிக்கு கேப்டனாக இருக்க முடியும். ஷுப்மன் கில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் டெஸ்ட் கேப்டன் பதவியை ஒரு நல்ல ஐபிஎல் சீசனை வைத்து மட்டுமே தீர்மானிக்கக்கூடாது.
ஒரு டெஸ்ட் தலைவருக்கு முதல் தர கிரிக்கெட்டைப் பற்றிய புரிதலும் இருக்க வேண்டும். அப்படி பார்க்கையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அந்த அனுபவம் இருக்கிறது என்று நம்புகிறேன். அதனால் இப்பதவிக்கு அவர் சரியான தேர்வாக இருப்பார்" என்று கூறிவுள்ளார். இதனால் இப்போது கில் கேப்டனாக அறிவிக்கப்படுவாரா அல்லது ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Also Read: LIVE Cricket Score
ரவீந்திர ஜடேஜா குறித்து பேசினால் இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுநாள் வரை 80 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 22 அரைசதங்களுடன் 3370 ரன்களையும், பந்துவீச்சில் 15 ஐந்து விக்கெட் ஹாலுடன் 323 விக்கெட்டுகளையும் வீழ்த்திவுள்ளார். இதுதவிர்த்து அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now