தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 9) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய் ஆணி கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இந்நிலையில் இப்பொட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தது.
Trending
இந்நிலையில் தான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய போட்டிக்கு பிறகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடரின் போது எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், இங்கு கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.
எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் ஒரு அணியாக சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய கிரிக்கெட் விளையாடிய வீரர்களுக்கும் கூட இன்னும் வெற்றிபெற வேண்டும் என்ற பசி இருக்கிறது. மேலும் அது தற்போது இளம் வீரர்களிடமும் பரவிவுள்ளது.
மேலும் இந்த அணியின் 5-6 துணிச்சலான வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அணியின் வேலையை எளிதாக்குகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் ஸ்ரேயாஸ் ஐயர் சைலண்ட் ஹீரோவாக செயல்பட்டு வருகிறது. நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம். எதிர்கால திட்டங்கள் ஏதும் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
Rohit Sharma will continue playing ODIs! #RohitSharma #INDvNZ #TeamIndia #Cricket pic.twitter.com/50p9kQ23dD
— CRICKETNMORE (@cricketnmore) March 9, 2025
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக கடந்த 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் அவர் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவிப்பாரா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தது. இந்நிலையில் அவை அனைத்திற்கும் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now