
நேற்று முன்தினம் பெங்களூரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட மிக முக்கியமான போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா இந்த போட்டிக்கு முன்பாக மூன்றில் இரண்டு போட்டிகளை தோற்று இருந்தது. பாகிஸ்தான் மூன்றில் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா டாஸ் இழந்து, முதலில் பேட்டிங் செய்து, பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி 367 ரன்களைச் சேர்த்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 62 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தான் தற்பொழுது பெற்றுள்ள இரண்டு வெற்றிகளும் சிறிய அணிகளுக்கு எதிராக வந்தவை.
எனவே இனி பாகிஸ்தான் பெரிய அணிகளை வென்று வந்தால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு பற்றி அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சில முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார்.