
New Zealand vs Afghanistan Dream11 Prediction Match 14, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
NZ vs AFG: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - ஜூன் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)
NZ vs AFG: Pitch Report
பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
NZ vs AFG: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 02
- நியூசிலாந்து - 01
- ஆஃப்கானிஸ்தான் - 00
- முடிவில்லை - 01