
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர்களின் இந்த முடிவு விணையை ஏற்படுத்தும் என அப்போது ரசிகர்களுக்கு புரியவில்லை.
அதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கியது. எந்தவொரு ஓவரிலும் அடங்க மாட்டோம் என தொடக்க வீரர்களே நாலாபுறமும் பந்தை சிதறடித்தனர். அந்தவகையில் தொடக்க வீரர் பென் டக்கெட் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் ஒல்லி போப் 65 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.
இவர்களின் ரன் வேட்டையால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலெல்லாம் 100 ரன்களை கடந்துவிட்டது. டாப் ஆர்டர் விக்கெட்கள் சரிந்த பிறகாவது ரன் வேகம் குறையும் என எதிர்பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்தார் ஹாரி புரூக். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரூக் பவுண்டரிகளுக்கு பந்தை அனுப்பிக்கொண்டே இருந்தார். 81 பந்துகளை சந்தித்த புரூக் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 89 ரன்களை அடித்து துவம்சம் செய்தார்.