
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்த போட்டியானது 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஹசன் நவாஸ் ரன்கள் ஏதுமின்றியும், முகமது ஹாரிஸ் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிட கேப்டன் சல்மான் ஆகா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இர்ஃபான் கான் 11 ரன்களிலும், குஷ்தில் ஷா 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.