-mdl.jpg)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து மகளிர் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் 11 ரன்களுக்கும், பெர்னண்டைன் ஒரு ரன்னிலும், பிலிமெர் 5 ரன்களுக்கும், மேடி க்ரீன் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த ஹாலிடே - இசபெல்லா கஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாலிடே 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இசபெல்லா அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.