கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரராக திகழ்ந்தவர் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான முரளி விஜய், 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமானார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 4,490 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சோபிக்காத முரளி விஜய், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2008லிருந்து 2018 வரை 10 ஆண்டுகள் விளையாடி 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 3,982 ரன்கள் அடித்துள்ளார்.
Trending
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்துவந்த முரளி விஜய், 2018ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை இழந்த முரளி விஜய், அதன்பின்னர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் இதுவரை 106 போட்டிகளில் விளையாடி 2,619 ரன்கள் அடித்துள்ளார் முரளி விஜய். ஐபிஎல்லிலும் முன்னணி வீரராக இருந்த முரளி விஜய், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லிலும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் முரளி விஜய் இன்று ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு வயது 38. இனிமேல் எந்த ஃபார்மட்டிலும் தனக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது என்பதை உறுதியாக அறிந்த முரளி விஜய், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now