உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பவர்-பிளே ஓவர்களில் தனது விக்கெட்டைத் தூக்கி எறியும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், முடிந்தவரை அதிக ரன்கள் எடுப்பதே தனது திட்டம் என்றும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “பவர்-பிளேயின் போது எடுக்கப்படும் ரன்கள் முக்கியமானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதன் பிறகு விக்கெட்டுகள் கொஞ்சம் மெதுவாக மாறும், பந்து கொஞ்சம் திரும்பும், மேலும் ஃபீல்டர்கள் 30யார்ட்க்கு வெளியே ஃபில்டிங் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என்று எனக்குத் தெரியும்.
அதனால் 30 யார்ட் வளையத்திற்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே இருக்கும்போது, நாங்கள் எங்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பவர்-பிளேயின் போது எடுக்கப்படும் ரன்கள் முக்கியமானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும் என்று நினைக்கும் போதெல்லாம் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினேன். அதற்கு மேல் நீங்கள் அடிக்கும் அனைத்து ரன்களும், மீதமுள்ள 40 ஓவர்களை விளையாட அணிக்கு பலன் தரும். என்னால் முடிந்த அளவு ரன்களை எடுக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட முயற்சியாக இருந்தது.
பவர்-பிளேவுக்குப் பிறகு எனது விக்கெட்டைத் தூக்கி எறிய வேண்டும் என்பது போல் விளையாடுவது எனது திட்டம் இல்லை. நான் ரன்களைச் சேர்க்க வேண்டிய வேகத்தையும், என்னுடைய நோக்கத்தையும் தொடர விரும்பினேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில ஷாட்களை விளையாட முயற்சித்த போது நான் ஆட்டமிழந்தேன். எனது பேட்டிங் திட்டம் மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். ஏனெனில் நமது உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு. நாட்டிற்காக இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். எனவே, நமது உள்நாட்டு கிரிக்கெட் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. அது அப்படியே இருப்பதையும், அது போட்டித்தன்மையுடன் இருப்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே நாங்கள் வீரர்களை தேர்வு செய்கிறோமே தவிர, ஐபிஎல் தொடரில் இருந்து அதிகல் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ரஞ்சி கோப்பை தொடரையும், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு வீரர்களைத் தேர்வுசெய்வதற்கு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களையும் நாங்கள் முன்னிலைப் படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now