
நாளை இந்திய அணி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் தரம்சாலா மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளி பட்டியலில் தங்களை கொஞ்சம் மேலே தூக்கி வைத்துக் கொள்ள முடியும். மேலும் நல்ல ரன் ரேட் கிடைக்கும் பொழுது, அது கடைசி நேரத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே இந்த போட்டி சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமான போட்டி. வங்கதேச அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேச சுழற் பந்துவீச்சில் சிக்கி திடீரென சரிந்து பரிதாபமாகத் தோற்றது.
இந்த நிலையில் நாளை உலகத் தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டி இருக்கும் என்பது குறித்து, ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நாங்கள் தினமும் சிறந்த பின்னர்களான ரஷீத், நபி, முஜீப், நூர் முகமது இவர்களை வலைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணி ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவதில் சிறப்பான அணி என்று நான் நினைக்கிறேன்.