PAK vs ENG, 1st Test: சச்சினின் மற்றொரு சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.
Trending
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலிவுடன் இணைந்து கேப்டன் ஒல்லி போப் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இப்போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார். இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 1000 ரன்களை அதிகமுறை கடந்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 5 முறை இந்த மைல்கல்லை எட்டி, முன்னாள் ஜாம்பவான்கள் பிரையன் லாரா, மேத்யூ ஹைடன், ஜாக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, அலெஸ்ட குக் ஆகியோருடன் இணைந்து இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 முறை இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்தில் உள்ளார்.
இதுதவிர இப்போட்டியில் ஜோ ரூட் 27 ரன்களை எட்டிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். அந்தவகையில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 59 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 16 சதங்கள், 20 அரைசதங்களை விளாசி இந்த சாதனையை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷாக்னே 45 போட்டிகளில் விளையாடி 3,904 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 3486 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 3101 ரன்களுடன் நான்காம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் 2755 ரன்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now