
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மேத்யூ மோட்ஸ் ஆகியோரும், பாகிஸ்தான் அணியில் காம்ரன் குலாம், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் ரன்களைச் சேர்த்து அணியை முன்னிலைப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.