
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று கராச்சியில் நடைபெற்றுவரும் முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் நட்சத்திர வீரர் டெவான் கான்வே நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆலான் - வில்லியம்சன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 29 ரன்களில் ஃபின் ஆலனும், 26 ரன்களில் கேன் வில்லியம்சனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் லேதம் 42, கிளென் பிலீப்ஸ் 37, மைக்கேல் பிரேஸ்வெல் 43 என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்பினை தவறவிட்டனர்.