
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் தந்தனர்.
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன்மூலம் முதல் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைச் சேர்த்து. மேலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.