
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. இதையடுத்து நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெறிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்துவீச முடிவுசெய்து, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த இரு போட்டிகளிலும் சதம் விளாசிய ஃபகர் ஸமான் இப்போட்டியில் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து இமாமுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.