PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாபர் ஆசம் தலைமையிலான இந்த அணியில் முகமது ஹாரிஸ், முகமது வாசிம், ஷாநவாஸ் தஹானி, ஸாஹித் மஹ்மூத் ஆகிய நான்கு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசம் (கே), அப்துல்லா ஷபிக், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, இஃப்திகார் அகமது, இமாம்-உல்-ஹக், குஷ்டில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், சௌத் ஷகீல், ஷதாப் கான், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர், ஸாஹித் மஹ்மூத்.
Win Big, Make Your Cricket Tales Now