
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை பிடிக்கு அணி எது? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
அதன்பின் இன்று நடைபெற்ற முக்கியமான் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - அப்துல்ல ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸ்மான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.