
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் இத்தொடருக்கான வங்கதேச அணி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தன் டி20 அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீம் அஃப்ரிடி ஆகியோர் டி20 அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர்களின் செயல்பாடும் மோசமாக இருந்ததன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.