-mdl.jpg)
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு! (Image Source: Google)
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இத்தொடருக்காக தயாராகும் வகையில் பல்வேறு அணிகளும் இருதரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது ஐயர்லாந்து மற்றும், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மே 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.