இரண்டு நாள்களில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்ததது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், உசாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் 300 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இருப்பினும் அந்த அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது . இருப்பினும் இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
Trending
இரு தினங்களுக்கு முன்பு தான் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியளில் ஆஸ்திரேலிய அணி 113 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now