
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிசெய்து அசத்தியது.
இதன்மூலாம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வென்றதுடன், இந்திய அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் நியூசிலாந்து அணியும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவதும் இதே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், இந்திய அணி சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பாகிஸ்தான் அணியாலும் இந்தியா அணியை வீழ்த்த முடியும் என கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும் என நினைக்கிறேன். கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றால் அது நன்றாக இருக்கு.