
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனல் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 வீரர்களை மட்டுமே தங்கள் அணியில் தக்கவைத்துள்ளது. அதேசமயம் இரண்டாவது போட்டியில் இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைவார்கள்.