
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஏறத்தாழ அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி மட்டும் இதுவரை அறிவிக்கப்படமலேயே இருந்தது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ராவுஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, இஃப்திகார் அஹ்மத் போன்ற நட்சத்திர வீரர்களுடன் அசாம் கான், சைம் அயூப் மற்றும் உஸ்மான் கான் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Pakistan have announced their T20 World Cup squad!#T20WorldCup #Pakistan #Cricket #BabarAzam pic.twitter.com/zPu8zCro26
— CRICKETNMORE (@cricketnmore) May 24, 2024