எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் 90 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 237 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
Trending
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த காகிசோ ரபாடா - மார்கோ ஜான்சன் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதியில் ரபாடா 31 ரன்களையும், ஜான்சன் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத், “ இறுதிவரை போராடிய எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன். மேலும் நீங்கள் வெற்றியை நோக்கி செல்லும் போது அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ததன் மூலம் நாங்கள் வெற்றிக்கு அருகில் இருந்தோம். இருப்பினும் நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை. அதேசமயம் பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் நாங்கள் எதிரணியை 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தடுமாறச் செய்த நிலையிலும், இறுதிக்கட்டத்தில் அவர்களை தடுத்த நிறுத்த முடியவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங்கில் அதனை செய்ய தவறிவிட்டோம். மேலும் தொடர்சியாக நாங்கள் அதே தவறை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now