பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்ததிருந்தது இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் ஹசன் நவாஸ் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஹசன் நவாஸ் பங்கேற்க இருப்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.