
நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வெள்ளைப் பந்து தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.