
South Africa tour Of Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய் கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரை முடித்த கையோடு பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இந்த போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.