
BAN vs PAK: வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அடுத்த மாதம் தாக்காவில் நடைபெறும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 2ஆம் தேதியும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இதையடுத்து வங்கதேச அணியானது அடுத்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜூலை 20ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூலை 22ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 24ஆம் தேதியும் நடைபெறும் என்றும், இந்த மூன்று போட்டிகளும் தாக்காவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.