
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், அனுபவ வீரருமான டேவிட் வார்னர் இருப்பார் என்ற பேச்சு ஒருபக்கம் இருந்தது. அவரை ஆதரிக்கும் விதமாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேசி இருந்தனர். ஆனாலும் அவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை இழந்துள்ளார் என தெரிகிறது.
இந்நிலையில், 29 வயதான பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் கடந்த 2021 நவம்பர் வாக்கில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அணியின் டெஸ்ட் செயல்படும் அருமையாக உள்ளது.