-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், தாமஸ் கெல்லி, அலெக்ஸ் கேரி, காலின் டி கிறாண்ட்ஹோம் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியில் ஆடம் ஹோஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 17 ஓவர்களில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெர்த் அணி தரப்பில் பெய்ன், லன்ஸ் மோரிஸ், பீட்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.