Advertisement

பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 19, 2024 • 02:02 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 19, 2024 • 02:02 PM

அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டியானது புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்னும் உறுதிசெய்யவில்லை. மேலும் இத்தொடரின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியது. அதன்படி 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், 2020-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைபடைத்தது. இதனால் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports