
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பில் சால்ட் 58 ரன்களையும், மேக்ஸ் ஹோல்டன் 38 ரன்களையும் சேர்த்தனர். லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் ரிச்சர்ட் கிளீசன் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் அணிக்கு ஜென்னிங்ஸ் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் ஷிம்ரான் ஹெட்மையர் 44 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜென்னிங்ஸ் 61 ரன்களைச் சேர்த்த நிலையிலும், லண்டன் ஸ்பிரிட் அணியால் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி விக்கெட்டுகளை கைப்பற்றினார்.